
பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி அமைக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி(BNP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 211 தொகுதிகளிலும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இதனடிப்படையில் 17 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய BNP தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷின் அடுத்த பிரதமராக தெரிவாகலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, இந்தத் தேர்தலை ஒரு ஏமாற்று வேலை” என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





