மலையகம்

அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் புதிய இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்துக்கு அனுமதி

அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29) பாலம் இடிந்து விழுந்தது, அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல் பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு பாலத்தை பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.

எனவே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சனிக்கிழமை (13) முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button