இலங்கை

சுவிட்சர்லாந்து தூதுவர் – ரில்வின் சில்வா இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல் நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button