தமிழீழம்தமிழ் நாடு

கச்சத்தீவை வைத்து அரசியல்வாதிகள் இனி மக்களை ஏமாற்ற முடியாது!

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை வரவேற்பதோடு, இனியும் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

 

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,“தமிழகத்தில் தேர்தல் வரும்போது ‘கச்சத்தீவை மீட்போம்’, ‘கச்சத்தீவு தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான கடல் பரப்பு’ எனத் தமிழக மீனவ மக்களை ஏமாற்றி, உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்து வருகின்றனர்.

 

கடந்த வருட தேர்தலின் போது அப்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் கூட தனது பிரச்சாரத்தில் ‘கச்சத்தீவை மீட்போம்’ என வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

 

நாம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாகக் கூறி வருவது, கச்சத்தீவு எமது கடல் பிரதேசம்; எமது எல்லைக்குள் மீன்பிடிக்க வர வேண்டாம் என்பதே ஆகும்.

 

ஆனால், தற்போது இந்திய உயர் நீதிமன்றம் ‘கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது; அது தொடர்பில் மத்திய அரசு இலங்கையுடனான நல்லுறவில் உள்ளது’ எனத் தெளிவாக விளக்கமளித்துள்ளது.

 

ஆகவே, இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களில் கச்சத்தீவை வைத்து அரசியல் செய்ய முடியாது. இனியாவது அந்த மக்கள் இதனை நன்கு உணர்ந்து நடக்க வேண்டும்” எனக் கூறினார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button