
சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் பலசாலிகளும் நடப்பு மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாமல் இருப்பவையுமான அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (22) நடைபெறுகிறது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.
அலிசா ஹீலி உபாதைக்குள்ளாகி இருப்பதால் தஹிலா மெக்ரா அணித் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் ஏற்கனவே அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுவிட்டதால் இன்றைய போட்டி முடிவு இந்த இரண்டு அணிகளினதும் நிலைகளை மாத்திரம் மாற்றி அமைக்கும்.
அணிகள்
அவுஸ்திரேலியா: ஜோர்ஜியா வொல், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி, பெத் மூனி, அனாபெல் சதர்லண்ட், ஏஷ்லி கார்ட்னர், தஹிலா மெக்ரா (தலைவி), சொஃபி மோலிநெக்ஸ், அலனா கிங், லின்சே ஸ்மித், மெகான் சூட்.
இங்கிலாந்து: டமி போமொன்ட், அமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நெட் சிவர் – ப்றன்ட், சொஃபியா டன்க்லி, எம்மா லாம்ப், அலிஸ் கெப்சி, சார்ளி டீன், சொஃபி எக்லஸ்டோன், லின்சே ஸ்மித், லோரென் பெல்






