
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இந்திய அணி வீரருமான கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “இந்திய அணி எங்கு விளையாடினாலும் வெற்றி பெறும். ஆனால் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பங்கேற்கக்கூடாது கூடாது.” என கேதர் ஜாதவ் தெரிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் இந்திய அணி ஆசியக் கிண்ணத்தைத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.





