டிசினோ மாநிலத்தில் உள்ள சியாஸ்ஸோ (Chiasso) நகரின் புலம்பெயர்வோர் மையம் மீண்டும் திறக்கப்படுகிறது. வியா மோட்டா (Via Motta) என்ற இந்த மையம் 2027 ஜனவரி இறுதி வரை செயல்படும்.
சுவிஸ் அரசின் புலம்பெயர்வு அலுவலகம் (SEM) சென்ற வியாழக்கிழமை இந்தக் கோரிக்கையை வைத்தது. சியாஸ்ஸோ, நோவாஸ்ஸானோ (Novazzano), பலேர்னா (Balerna) ஆகிய நகராட்சிகளுடன் பேசப்பட்டது.
இரண்டு காரணங்கள் உள்ளன. புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சூரிச் (Zürich) மையத்திலும் தீ விபத்து நடந்ததால் அது வழக்கம்போல் இயங்கவில்லை.
இந்த மையத்தில் அதிகபட்சம் 100 முதல் 120 பேர் தங்கலாம். வரும் வாரங்களில் சுமார் 100 பேர் வரலாம் என்று SEM கணிக்கிறது. இது இத்தாலியில் வந்திறங்கும் படகுகளைப் பொறுத்தது. பெரும்பாலும் குடும்பங்களை இங்கே தங்க வைப்பார்கள். எரித்திரியா, சோமாலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று சியாஸ்ஸோ மேயர் புருனோ அரிகோனி (Bruno Arrigoni) கூறுகிறார்.
பாதுகாப்புக்காக தனியார் நிறுவனத்தின் ரோந்து மீண்டும் தொடங்குகிறது. பாதுகாப்புச் செலவுக்கான தொகையை மாநிலத்துக்கும் நகராட்சிக்கும் அரசு கொடுக்கும். மையம் மூடியிருந்தபோது பராமரிப்பு வேலைகள் நடந்தன.
2023-ல் அதிகமானோர் வந்தபோது பல சிக்கல்கள் ஏற்பட்டன. அது மீண்டும் நடக்காமல் இருக்கவே குடும்பங்களுக்கு முன்னுரிமை. குளிர்காலத்தில் வருகை குறைவது வழக்கம். இந்த முறை அப்படித் தெரியவில்லை.
மூலம்: RSI
புகைப்படம்: David Heilbron / Unsplash





