சுவிஸ்

சூஷ் கிராமத்தின் நிலத்தடி நீரில் டீசல் – குடிநீருக்குப் பாதிப்பு

கிரவுபுண்டன் மாநிலத்தில் (Graubünden) உள்ள ஸெர்னெஸ் (Zernez) நகராட்சியின் சூஷ் (Susch) கிராமத்தில், நிலத்தடி நீரில் டீசல் கலந்துவிட்டது. செப்டம்பரில் நடந்த பஸ் விபத்தில் கொட்டிய டீசல்தான் காரணம்.

அந்த விபத்தில் நெதர்லாந்து பஸ் ஒன்றில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். பஸ்ஸிலிருந்து சுமார் 450 லிட்டர் டீசல் வெளியே கசிந்தது. மறுநாளே மேல் மண்ணை அகற்றினார்கள். ஆனால் டீசல் அதற்குள் நிலத்துக்கு அடியில் இறங்கிவிட்டது.

இப்போது அதிகாரிகள் அதை உறிஞ்சி எடுக்கப் பார்க்கிறார்கள். இரண்டு பம்புகள் மாசடைந்த தண்ணீரை எடுத்து ஒரு கருவிக்கு அனுப்புகின்றன. அங்கே டீசலும் தண்ணீரும் பிரிக்கப்படுகின்றன. சுத்தமான தண்ணீரை மீண்டும் ஆற்றில் விடுகிறார்கள். ஆனால் டீசல் எந்தப் பக்கம், எவ்வளவு வேகமாகப் போகிறது என்பது இன்னும் தெரியவில்லை.

டீசல் இதுவரை குடிநீர்க் கிணற்றை அடையவில்லை. இருந்தாலும் பாதுகாப்புக்காக, நிலத்தடி நீரை எடுப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

இந்த ஆண்டு வறட்சியால் கிரவுபுண்டனில் பல ஊர்களுக்கே தண்ணீர் கிடைப்பது கஷ்டம். ஊற்றுகளிலும் வழக்கத்தை விடத் தண்ணீர் குறைவு. குளிர்காலச் சுற்றுலாப் பருவமும் நெருங்குகிறது. அதனால் தண்ணீர் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு போடுவது, அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவது பற்றி நகராட்சி யோசிக்கிறது.


மூலம்: RSI
புகைப்படம்: Elahi Shohon / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button