இலங்கைதமிழீழம்விளையாட்டு

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

U19 ஆசியக் கிண்ண இலங்கை அணியில் வாய்ப்பு பெற்ற அவர் ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார்.

நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடருக்காக இலங்கை அணி கடந்த திங்கட்கிழமை(02) ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தது.

வடமராட்சி – பருத்தித்துறையை சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷ் இலங்கை கிரிக்கெட் அரங்கில் வளர்ந்துவரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்காளதேச அணிக்கு எதிரான தனது அறிமுக இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டியில் வெறும் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் முதலாவது சர்வதேச போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து இத்தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நேற்றைய தினம் (05.11.2026) இளையோர் ஆசியக் கோப்பையில் தனது அச்சுறுத்தும் பந்துவீச்சால் மிரட்டியுள்ளார் விக்னேஸ்வரன் ஆகாஷ்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் இலங்கை அணியின் சார்பாகப் பந்துவீசிய விக்னேஸ்வரன் ஆகாஷ் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

4.1  ஓவர்கள் வீசிய அவர் 1 ஓட்டங்களற்ற ஓவர் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 7 ரண்களை மாத்திரம் விட்டுக்கொடுத்துள்ளார், • எக்கனாமி 1.7 ஆகும். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது இளம் வீரருக்கு வாழ்த்துகள்!

தனது மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சால் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கிலும் முத்திரை பதித்து வரும் விக்னேஸ்வரன் ஆகாஷ் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் எதிர்கால சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#வடமராட்சி #TamileelamCricket #SriLankaCricket #கிரிக்கெட் #தமிழ் #பருத்தித்துறை #U19AsiaCup #VigneshwaranAkash #CricketNews #SLvsMAL #YoungTalent #TamilNews

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button