
போர் மற்றும் பேரிடர் மருத்துவக் கருத்தரங்கு 2026 சுவிற்சர்லாந்து இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) ஏற்பாட்டில் தலைநகர் பேர்னில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்கூட இடம்பெற்றுள்ளது.
இக் கருத்தரங்கில் சுவிற்சர்லாந்து இராணுவத் தலைவர், இராணுவ மருத்துவப் பணிப்பாளர் நாயகம், இராணுவ உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் மருத்துவ விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாகப் பிரான்ஸ் நாட்டின் இராணுவப் பிரதிநிதிகள் மற்றும் ஜெர்மன் கூட்டாட்சிப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழீழத் தமிழர்களின் தலைமைப் பண்பும் திறமையும்:
இந்நிகழ்வானது சுவிற்சர்லாந்தின் இராணுவ மருத்துவத் தயார்நிலை, பேரிடர் கால மருத்துவச் சேவைகள், அவசரகால அறுவைச் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச மருத்துவ ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் ஒரு முக்கியப் மைல்கல்லாகும்.
இந்த உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மிகச் சிறப்பாகவும் திறம்படவும் நாடத்திய லெப்டினன்ட் ஆதர்சன் கண்ணதாசன் மற்றும் துணைத்தலைவர் லெப்டினன்ட் அபிராம் சந்திரலேகர் அவர்களுக்கும் இணைந்து முன்னெடுத்துள்ளனர் இவர்கள் இருவருக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் பெருமிதமும் உரித்தாகின்றன.
புலம்பெயர் மண்ணில் பிறந்து வளர்ந்தாலும், நமது இளையவர்கள் தங்களின் அயராத உழைப்பாலும் அறிவுத் திறமையாலும் இதுபோன்ற உயரிய இராணுவ மற்றும் மருத்துவப் பதவிகளை அடைந்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்து வருவது மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்றுச் சாதனையாகும்.







