
பலாலியில் நீண்டகாரமாக போராடிய தாயாரின் கோரிக்கை நிறைவேறாமலேயே உயிரிழந்த காரணத்தால் பூதவுடல் போராட்ட களத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தம்பித்துரை இளையகுட்டி என்பவர் தனது 83ஆவது வயதில், வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை (07.11.2026) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த தாய் கடந்த 36 ஆண்டுகளாக தாய்மண்ணாகிய பலாலி மண்ணை இழந்து சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு வாழ்ந்து வந்துள்ளார்.
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் பலாலியில், தம் சொந்த மண்ணில் மீள் குடியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த அமைதிவழி போராட்டங்களில் இணைந்து போராடி வந்தார்.
அந்த தாயாரின் இறுதி கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று , தகன கிரியைகளுக்காக பலாலி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதன்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு, பூதவுடல் எடுத்து வரப்பட்டு , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பலாலியில் உள்ள தனது சொந்த வீட்டிலையே உயிர் போக வேண்டும். சொந்த வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறி வந்த, தாயார் தனது ஆசை நிறைவேறாமலே உயிரிழந்து தனது சொந்த நிலத்திற்காக போராடிய போரட்ட களத்தில் பூதவுடலாகவும் போராடிய நில ஆக்கிரமிப்பிற்கு ஆதாரமாக விளங்கிய சாட்சியம் ஒன்றின் குரல் தன் சொந்த மண்ணில் அடங்கி போனது.
இது போன்று எத்தனையோ சாட்சியங்கள் மண்ணோடு மண்ணாகு போனாலும் தமது செந்த நிலத்தை மீட்கும் வரை உரிமைக்கான குரல் ஓயாது எனது பலாலி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#பலாலி #மண்மீட்புப்போராட்டம் #நிலஆக்கிரமிப்பு #ஈழம் #Palaly #LandRights #TamilsStruggle #DisplacedInHomeland
#SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM





