இந்தியாஇலங்கைதமிழீழம்தமிழ் நாடு

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி சென்று மீன்பிடித்தவர்களின் படகுகள் உடைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் உடைத்து  அகற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இதன்போது கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதுடன், அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வழக்கு நடவடிக்கைகளின் பின்னர் பல சந்தர்ப்பங்களில் விடுவிக்கப்படுகின்றனர். எனினும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நீண்ட காலமாக இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள மயிலிட்டி துறைமுகத்திலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் சுமார் 90 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மயிலிட்டி துறைமுகத்தில் உள்ளூர் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், அங்கு நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் உடைத்து  அகற்றப்பட்டன.

இதனால் ஏற்கனவே இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button