சுவிஸ்

தீசினோவில் சிறு விலங்கு வேட்டைக் காலம் தொடங்கியது

சுவிஸில் உள்ள தீசினோ மாநிலத்தில் (Ticino) சிறு விலங்குகளை வேட்டையாடும் காலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 30 வரை இதற்கு அனுமதி உண்டு.

இந்த வேட்டையில் முயல், வூட்காக் என்ற பறவை, மலைப் பகுதியில் வாழும் கறுப்புக் காட்டுக்கோழி (gallo forcello) போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். இதை “சிறு வேட்டை” என்று சொல்வது உயரத்தை வைத்து அல்ல. இது பழைய மன்னர் காலத்து பெயர். அப்போது மான், காட்டுப்பன்றி போன்ற பெரிய விலங்குகளை உயர்குடி மக்கள் வேட்டையாடினார்கள். சிறிய விலங்குகளை மற்றவர்கள் வேட்டையாடினார்கள்.

இந்த ஆண்டு வேட்டை கடந்த ஆண்டைப் போலவே நடக்கிறது என்கிறார் தீசினோ வேட்டைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் தாவிதே கோர்த்தி (Davide Corti). சமீப ஆண்டுகளில் முயல், காட்டுக்கோழி எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கிறது. அது தொடரும் என்று அவர் நம்புகிறார். இந்த ஆண்டு கணக்கெடுப்பில் சுமார் 300 ஆண் காட்டுக்கோழிகள் தென்பட்டன. ஆண்டுதோறும் வேட்டையாடப்படுவது அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.

இந்த வேட்டையில் நாய்க்கு முக்கியப் பங்கு உண்டு. நாய் வெறும் உதவியாளர் அல்ல, குடும்பத்தில் ஒருவர் என்கிறார் சங்கத்தின் நாய்ப் பிரிவுத் தலைவரும் கால்நடை மருத்துவருமான தாவிதே லாஃப்ராஞ்சி (Davide Lafranchi). நாய் ஆண்டு முழுவதும் வேட்டைக்காரருடன் இருக்கிறது. அதற்குப் பல மணி நேரம் பயிற்சி கொடுக்க வேண்டும்.


மூலம்: RSI
புகைப்படம்: Desirae Hayes-Vitor / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button