இலங்கை

சுவிற்சர்லாந்தில் சிறப்புற இடம்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று (20.09.2026) மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிவரை களமாடி வீரச்சாவினை தழுவி இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுவிற்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற இன்றைய வீரவணக்க நிகழ்வினைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை சார்பாக போராளிகளும் செயற்பாட்டாளர்களும் தமிழின உணர்வாளர்களும் மக்களும் இணைந்து ஒழுங்கு படுத்தியிருந்தனர். சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இந்நிழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கியது.தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை பெற்றோர், உறவினர்களால் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் மாவீரர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிறைவடைந்ததும் தலைமை தாங்கியவரின் சிறப்புரை இடம்பெற்றது .

இந்நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் விடுதலைப் போராட்டத் தியாக வரலாறுகள் வெளிப்படுத்தப்பட்ட தருணத்தில் கூடியிருந்த மக்களிடம் ஏற்பட்ட உணர்வுகளைச் சொற்களால் விவரிக்க முடியாது. அவை அனைத்தும் 17 ஆண்டுகள் கடந்தாலும் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைமுறைக்கும் மக்களுக்கும் கடத்தும் விதமாக உறுதிப்படுத்தபட்ட ஒவ்வொரு மாவீரர்களினதும் சாதனைகளும் தியாகங்களும் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பகிரப்பட்டன. மாலை 6.30 மணியளவில் தேசியக் கொடி இறக்கலுடன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

#Maaveerar #Veeravanakkam #PottuAmman #Tamileelam #RememberingHeroes #TamilDiaspora #MaveerarPanimanai #OurHeroes #Maaveerar #TamilHeritage #SwissTamilInfo #SwissTamil #Swiss #France #UnitedKingdom #Australia #SwissTamilInfo #SwissTamil #ViduthalaiFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #விடுதலைFM

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button