சுவிஸ்

சுவிஸ் கீழவை கடுமையான புகலிட நடவடிக்கைகளுக்கு ஆதரவு! இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற கீழவை, புகலிடக் கொள்கையை மேலும் கடுமையாக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையும் அடங்குகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில், வலதுசாரியான Swiss People’s Party நாடாளுமன்றக் குழு முன்வைத்த பிரேரணையை கீழவை ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய விதிகளில், வேலையற்ற எல்லை தாண்டி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொடர்பாக முன்வைக்கப்படும் மாற்றங்களை நிராகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பிரேரணையின் மூலம், மிகவும் கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்ற இரட்டைக் குடியுரிமையாளர்களின் சுவிஸ் குடியுரிமையை இரத்து செய்து, அவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் பெண்களின் புகலிடக் கோரிக்கைகளை கையாளும் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவர கீழவை கோரியுள்ளது. இதன்படி, அவர்கள் இனிமேல் தானாகவே புகலிடத் தகுதி பெறாமல், தற்காலிக அனுமதி (provisional admission) மட்டுமே பெறும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒத்துழைக்காத சொந்த நாடுகளுக்கு எதிராக குறிவைத்த தடைகள் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் கீழவையின் பெரும்பான்மையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவாதத்தில் பரிசீலிக்கப்பட்ட ஒன்பது பிரேரணைகளையும் மத்திய அரசு முன்னதாகவே நிராகரித்திருந்தது.

இப்போது, கீழவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பிரேரணைகள் தொடர்பில் சுவிஸ் நாடாளுமன்ற மேலவைஅடுத்த கட்டமாக முடிவு எடுக்கவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button