இலங்கை

சமூக வலைத்தளப் பதிவுக்காக சவுதியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை!

சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button