உலகம்

கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது

 

இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.

இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா – கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button