இலங்கை

இலங்கையின் குறைந்தபட்ச ஊதியம் உலகளவில் 120ஆவது இடம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில்தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இலங்கையின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் சக்தி சுமார் 200 அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதன் மூலம் உலகளவில் குறைந்த குறைந்தபட்ச ஊதியம் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில்

  • 🇰🇷 தென் கொரியா – USD 2,362 | உலகில் 11ஆவது இடம்
  • 🇯🇵 ஜப்பான் – USD 1,839 | 16ஆவது இடம்
  • 🇱🇰 இலங்கை – USD 200 | 120ஆவது இடம்

தெற்காசிய நாடுகளில் இலங்கை கடைசி நிலையில் உள்ளது:

  • 🇵🇰 பாகிஸ்தான் – USD 570 | 68ஆவது இடம்
  • 🇳🇵 நேபாளம் – USD 490 | 78ஆவது இடம்
  • 🇧🇩 பங்களாதேஷ் – USD 379 | 89ஆவது இடம்
  • 🇮🇳 இந்தியா – USD 233 | 111ஆவது இடம்
  • 🇱🇰 இலங்கை – USD 200 | 120ஆவது இடம்

சுவிட்சர்லாந்து முதலிடம்

உலகளவில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் குறைந்தபட்ச ஊதியத்தின் வாங்கும் சக்தி மாதத்திற்கு USD 3,804க்கு சமமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஏனைய நாடுகள்:

  1. 🇨🇭 சுவிட்சர்லாந்து – USD 3,804
  2. 🇩🇪 ஜெர்மனி – USD 2,928
  3. 🇬🇧 பிரிட்டன் – USD 2,902
  4. 🇳🇱 நெதர்லாந்து – USD 2,876
  5. 🇦🇺 ஆஸ்திரேலியா – USD 2,819
  6. 🇧🇪 பெல்ஜியம் – USD 2,752
  7. 🇮🇸 ஐஸ்லாந்து – USD 2,730
  8. 🇳🇿 நியூசிலாந்து – USD 2,673
  9. 🇫🇷 பிரான்ஸ் – USD 2,465
  10. 🇮🇪 அயர்லாந்து – USD 2,433

இலங்கைக்கு கீழே இந்தப் பட்டியலில் 10 நாடுகள் மட்டுமே உள்ளன. அவை நைஜர், பூட்டான், ஹெய்ட்டி, கினியா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சியாரா லியோன், கானா, கிர்கிஸ்தான், கினியா-பிசாவ் மற்றும் காம்பியாஆகியவையாகும். இவற்றில் காம்பியா கடைசி இடத்தில் இருந்து USD 67 என்ற மிகக் குறைந்த அளவைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் நேரடியாக அமெரிக்க டொலரில் கிடைக்கும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக, ஒவ்வொரு நாட்டிலும் அந்த ஊதியத்தால் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவை பிரதிபலிக்கும் உள்நாட்டு வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power Parity – PPP) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

மேலும், வரி மற்றும் கூடுதல் கொடுப்பனவுகள் இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button