
கொழும்பு நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக, தொடர்மாடி குடியிருப்புகளை நவீனமயமாக்கும் விசேட திட்டம் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அத்துடன், இத்திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு 09, தெமட்டகொட, மிஹிந்துசென்புர மற்றும் சியபத் செவன ஆகிய அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,இத்திட்டத்தின் ஆரம்பம் மற்றும் குடியிருப்புகளின் தற்போதைய நிலையை நேரில் கண்டறிவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 20 ஆம் திகதி அங்கு கள ஆய்வு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





