
அபிவிருத்தி பங்குடைமையானது மக்களை இலக்காக கொண்டதாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளி சமூகத்தின் கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தினார்.
இதேவேளை இந்திய வம்சாவளி சமூகத்தின் நலனுக்காகக் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, UEDS இன் சாதனையாளர்களுக்கு உயர் ஸ்தானிகர் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.





