இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு – பண்டாரவளையில் போராட்டம்!

சோசலிசக் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த போராட்டமானது, பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

 

 

 

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், நாட்டில் தற்போது பொருட்களின் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக தெரிவித்து, பல்வேறு கோஷங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

 

 

மேலும், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button