உலகம்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், எரிபொருள் விநியோகம் தடைப்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், உலகளாவிய மசகு எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

 

கப்பல்கள் மீது ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்கப் படைகள் உடனடியாகத் தலையிடும் என ஓவல் அலுவலகத்திலிருந்து ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button