இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் வளித்தரச் சுட்டி பாதிப்பு – வெளியே நடமாடுவோர் அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04) வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு, அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அந்தவகையில், கொலன்னாவை, கோட்டே, கேகாலை மற்றும் காலி ஆகிய இடங்களில் வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் காரணமாக, பொதுமக்கள் திறந்தவெளிகளில் நடமாடும்போது அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button