விளையாட்டு

பாகிஸ்தானின் இறுதி முடிவு வெள்ளி அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – கிரிக்கெட் சபை தலைவர்

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மோஹ்சின் நக்வி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

 

இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோஹ்சின் நக்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் மிகப்பயனுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

 

இதன்போது சர்வதேச கிரிக்கெட் பேரவை விவகாரங்கள் குறித்து அவருக்கு தாம் விளக்கமளித்ததாகவும், அனைத்து வாய்ப்புகளையும் (Options) திறந்த நிலையில் வைத்து இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும் எனவும் மோஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பது அல்லது தொடரிலிருந்து விலகுவது போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button