இந்தியா

கொரோனாவுக்குப் பின் வளி மாசுபாடு அச்சுறுத்தல் – நுரையீரல் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இந்தியாவின் கடுமையான பொதுச்சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாக வளி மாசுபாடு மாறி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படாத நிலையில், இது பாரதூரமான பிரச்சினையாக மாறும் என இங்கிலாந்தைச் சேர்ந்த நுரையீரல் சம்பந்தமான மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியா – புதுடெல்லியில் வளி மாசுபாடு அதிகளவில் மோசமடைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று டெல்லியில் வளி மாசுபாட்டின் அளவு 407 ஆகப் பதிவாகியுள்ளது.

இது மிகவும் ஆபத்தான அளவு எனவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வாகனப் புகை காரணமாகவே 40 சதவீத வளி மாசு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், நத்தார் பண்டிகை விடுமுறையை அடுத்து, நேற்று காலை டெல்லியில் அதிகளவான வாகனங்கள் பயணித்தமையால் வளி மாசுபாடு அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button