இந்தியா

குஜராத்தில் நிலநடுக்கம்; அச்சத்தில் வெளியேறிய பொதுமக்கள்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளி வரவில்லை.

இருப்பினும், பொதுமக்கள் பலரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துள்ளனர்.

4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரியளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று கருதப்படுகிறது.

2 வாரங்களுக்கு முன்பாக ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button