
இலங்கை கடற்படை வழங்கிய தகவலுக்கமைய மாலைதீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீன்பிடி படகொன்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளே இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும்
பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.





