தொழில்நுட்பம்

Google Chromeக்கு சவால்- ChatGPT Atlas AI அறிமுகம்

உலகின் மிகவும் பிரபலமான உலாவியான குரோமை இயக்கும் கூகிள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட புதிய வலை உலாவியை (web browser) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய உலாவிக்கு ChatGPT Atlas எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உலாவி, ஆப்பிள் நிறுவனத்தின் MacOS இயங்குதளத்தில் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.

OpenAI மேலும் தெரிவித்ததாவது, Atlas-ல் “Agent Mode” எனப்படும் ஒரு பணம் செலுத்தும் அம்சமும் (paid feature) வழங்கப்படும்.

இது, ChatGPT-யை அடிப்படையாகக் கொண்டு, பயனர்களுக்குப் பதிலாகத் தானாகவே இணையத் தேடல்களை (web searches) மேற்கொள்ளும் திறனை வழங்கும்.

இந்த “Agent Mode” பணம் செலுத்தும் ChatGPT சந்தாதாரர்களுக்கே கிடைக்கும்.

இது உலாவல் செய்யும் போது ChatGPT-யுடன் இணைந்து செயற்பட்டு, தேடல்களை “விரைவாகவும் பயனுள்ளதாகவும்” மாற்றும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

OpenAI தற்போது தனது இணைய சேவைகளைப் பயன்படுத்தப் பயனர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகிறது.

அதில் Etsy, Shopify போன்ற மின் வணிக தளங்களும், Expedia, Booking.com போன்ற பயண முன்பதிவு சேவைகளும் அடங்கும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button