மலையகம்

மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
மஸ்கெலியாவில்

தேயிலை தொழிற்சாலையொன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் நல்லதண்ணி லக்ஸபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

பெருந்தொகை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பெருந்தொகையான தேயிலை அழிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேயிலை தூள் உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தீ, தேயிலை கொழுந்து சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு பரவி பொதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்த தேயிலை தூளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை
இதையடுத்து பரவத் தொடங்கிய தீ, தேயிலை தொழிற்சாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்டத் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் அத்தோடு தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் தீ விபத்து குறித்து நல்லதண்ணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button