இலங்கை

ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இந்த நாட்டில் பிறந்த அனைவரும் அந்த ட்டத்தின் கீழ் உள்ளனர். சட்டப் புத்தகத்தில் உள்ளபடி நீதிமன்றம் முடிவுகளை எடுக்கின்றது.

நாளை ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படாவிட்டால், தனது யூடியூப் பக்கத்தை முடக்கிக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் முன்னர் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது> லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்றமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button