தமிழீழம்

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. 

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம், இந்திய கடற்றொழிலாளர்கள் 64 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் 24 கடற்றொழிலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் தமது கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் ஒரு கட்டமாக, நாளைய தினம் இராமேஸ்வரத்தில் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தமிழக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button