மலையகம்

நானுஓயா தொடருந்து நிலைய அபிவிருத்தி பணிகள் விரைவுபடுத்தப்படும்

நானுஓயா தொடருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் துரிதப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
நானுஓயா தொடருந்து நிலையத்தின் அபிவிருத்தியினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது இன்றியமையாத ஒன்றெனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நானுஓயா தொடருந்து நிலையத்தை அண்மித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button