
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்றது.
இந்த சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் டெல்லி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





