இலங்கை

கூட்டுப் பொறுப்பை பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை.!

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் உறுப்புரை 43(1) இன் படி அமைச்சரவை, கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு பதிலை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும், அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தை வெளியிட்டார்.

இந்த விடயத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளது.” – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button