இலங்கை

இலங்கைக்கு உலக வங்கி 250 மில்லியன் டொலர் நிதி உதவி.

உலக வங்கியினால் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்தது. குறித்த கடன் தொகையிலேயே 250 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு செலவு திட்டத்திற்கும் எஞ்சிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button