சுவிஸ்ஸில் பல ஸ்கி (பனிச்சறுக்கு) நிலையங்கள் இந்த சனிக்கிழமை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளன. நவம்பர் 29-ஆம் தேதியே இந்த ஆண்டின் ஸ்கி பருவம் தொடங்கிவிட்டது.
காரணம், நவம்பரில் அசாதாரணமாகக் கொட்டிய பனி. வேலே மாநிலத்தில் (Valais) உள்ள வெசோனாஸ் (Veysonnaz) மலைப்பகுதியில் 90 சென்டிமீட்டர் பனி விழுந்திருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பனி விழுந்தது 1987-க்குப் பிறகு இப்போதுதான் என்கிறார் ஒரு பனி நிபுணர். அதே மாநிலத்தில் ஃபின்ஓ (Finhaut) பகுதியில் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 3 மீட்டர் பனி விழுந்தது.
வேலே மாநிலத்தில் ஜெர்மாட் (Zermatt), கிளாசியர் 3000 (Glacier 3000) நிலையங்கள் முழுமையாகத் திறந்திருக்கின்றன. கிரிமாண்ட்-ஜினால் (Grimentz-Zinal), க்ரான்-மொந்தானா (Crans-Montana), அன்செர் (Anzère), லா ஃபூலி (La Fouly) போன்ற இடங்களிலும் ஸ்கி செய்யலாம்.
வோ மாநிலத்திலும் (Vaud) வில்லார்-கிரியோன்-லே டியாப்லரே (Villars-Gryon-Les Diablerets), லேசான் (Leysin) நிலையங்கள் திறந்துள்ளன. சில இடங்களில் இப்போதைக்கு இந்த வார இறுதிக்கு மட்டுமே திறப்பு.
வானிலை அறிக்கையின்படி, சமவெளிகளில் மூடுபனியும் மேகமும் இருக்கும். ஆனால் மலைப்பகுதிகளில் வெயில் அடிக்கும்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Chris Biron / Unsplash





