தெசின் மாகாணத்தில் (Ticino) “நே ரூஜ்” (Nez Rouge) சேவை டிசம்பர் 4 முதல் மீண்டும் தொடங்குகிறது. கார் ஓட்ட முடியாத நிலையில் இருப்பவர்களை, அவர்களின் சொந்தக் காரிலேயே வீட்டில் கொண்டுபோய் விடும் தன்னார்வலர் சேவை இது.
விருந்து முடிந்து கார் ஓட்ட முடியாது என்று தோன்றினால், 0800 802 208 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இரண்டு தன்னார்வலர்கள் வருவார்கள். ஒருவர் உங்கள் காரை ஓட்டுவார். மற்றவர் தன் காரில் பின்னாலேயே வருவார். மது குடித்திருந்தால் மட்டுமல்ல, களைப்பாக இருந்தாலும், மருந்தின் பாதிப்பு இருந்தாலும் அழைக்கலாம்.
உங்களோடு வந்தவர்களையும் வீட்டில் இறக்கிவிடுவார்கள். எல்லோரும் வெவ்வேறு இடங்களில் இருந்தால், கார் உரிமையாளர் கடைசியாக இறங்குவார். டிசம்பரில் இந்தச் சேவை இலவசம். குறிப்பிட்ட வார இறுதி நாட்களிலும் புத்தாண்டு இரவிலும் சேவை இருக்கும்.
ஆண்டின் மற்ற நாட்களிலும் சேவையைக் கேட்கலாம். திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிறுவனங்களும் தனிநபர்களும் மின்னஞ்சலில் கேட்க வேண்டும். குறைந்தது ஒரு மாதம் முன்பே சொல்ல வேண்டும். அப்போது தன்னார்வலர்களின் செலவுக்காகப் பணம் வாங்கப்படும். எவ்வளவு என்பது நிகழ்ச்சியைப் பொறுத்தது.
தன்னார்வலர்கள் எப்போதும் தேவை. செல்லுபடியாகும் சுவிஸ் ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும். கட்டாயம் வர வேண்டும் என்று எதுவும் இல்லை. நேரம் இருக்கும்போது வந்தால் போதும். சிலர் புத்தாண்டு இரவில் மட்டும் உதவுகிறார்கள்.
மூலம்: RSI
புகைப்படம்: Samuele Errico Piccarini / Unsplash





