சுவிஸ்ஸில் முதல் முறையாக ஹேக்கர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முக்கிய சேவைகளைத் தாக்கியுள்ளனர். இணையப் பாதுகாப்புக்கான சுவிஸ் கூட்டரசு அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. எந்த நிறுவனங்கள், யார் தாக்கினார்கள் என்பதை அது சொல்லவில்லை. இனி இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது.
பெரிய தாக்குதல் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? மக்கள் பாதுகாப்புக்கான சுவிஸ் கூட்டரசு அலுவலகம் (OFPP) சில சூழ்நிலைகளைக் கணித்துள்ளது. மின்சாரம் ஒன்று முதல் நான்கு நாட்கள் நின்றால், சிக்னல் விளக்குகள், லிஃப்ட், டிராம், பஸ் எல்லாம் நின்றுவிடும். சுமார் அரை மணி நேரத்தில் மொபைல் நெட்வொர்க் பாதிக்கப்படும். ATM, கடைகளில் கார்டு பணம், பெட்ரோல் பம்ப் எதுவும் வேலை செய்யாது. ட்ரெயினும் நிற்கலாம். நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.
ஒரு பெரிய டெலிகாம் நிறுவனம் செயலிழந்தாலும் சிக்கல்தான். Twint வேலை செய்யாது. வங்கிக்கான உறுதிப்படுத்தும் SMS கோடுகள் வராது. அவசர எச்சரிக்கை ஆப் Alertswiss-ம் கிடைக்காது. தண்ணீர் விநியோகம் நாடு முழுவதும் நிற்க வாய்ப்பு குறைவு. ஆனால் சில இடங்களில் தண்ணீர் நிற்கலாம்.
சமீபத்தில் ஹேக்கர்கள் ஐரோப்பாவில் சில சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிர்சாதனங்களை தூரத்தில் இருந்து கெடுத்தனர். சுவிஸ்ஸில் கோனிஸ் (Köniz) நகரில் ஒரு இறைச்சிக் கடையும் மூன்று Volg கடைகளும் பாதிக்கப்பட்டன. சில பொருட்களை வீசவேண்டி வந்தது.
அதனால் வீட்டில் அவசர சேமிப்பு வைத்திருக்கும்படி சுவிஸ் அரசு சொல்கிறது. ஒருவருக்கு 9 லிட்டர் தண்ணீர், ஒரு வாரத்துக்கான உணவு, டார்ச், பேட்டரி, பவர் பேங்க், ரேடியோ, தேவையான மருந்துகள், கொஞ்சம் ரொக்கப் பணம் வேண்டும். 2027 இறுதிக்குள் இன்டர்நெட் இல்லாமலும் சில கார்டு பணப்பரிமாற்றங்கள் நடக்கும் வசதி வரும்.
மூலம்: Le Matin
புகைப்படம்: FlyD / Unsplash





