சுவிஸ்

ஃப்ரிபூர் தேர்தல்: மாநில அரசில் வலதுசாரிகள் முன்னிலை

ஃப்ரிபூர் மாநிலத்தில் (Fribourg) இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மாநில அரசுக்கான முதல் முடிவுகளில் வலதுசாரிக் கூட்டணியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மாநில அரசில் (Conseil d’État) மொத்தம் 7 இடங்கள். அதோடு மாநிலப் பாராளுமன்றம் (Grand Conseil), மாவட்ட நிர்வாகத் தலைவர் பதவிகளுக்கும் வாக்களிப்பு நடந்தது. பிற்பகல் 2.30 மணி வரை கிட்டத்தட்ட எல்லா நகராட்சிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டுள்ளன.

முதல் 5 இடங்களில் வலதுசாரிக் கூட்டணியின் 5 வேட்பாளர்களும் இருக்கிறார்கள். அடுத்த 5 இடங்களில் இடதுசாரிக் கூட்டணியினர் உள்ளனர். இப்போதைய அமைச்சர் ரோமான் கொலோ (Romain Collaud) முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 10 பேரில் 6 பேர் வாக்களித்துள்ளனர்.

முதல் 4 பேர் முதல் சுற்றிலேயே தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள பிலிப் தெமியேர் (Philippe Demierre) தேவையான வாக்குகளுக்கு மிக அருகில் இருக்கிறார். இடதுசாரிகளில் சோஷலிசக் கட்சியின் லிஸ்-மரி கிராடன் ஆறாவது இடத்திலும், பசுமைக் கட்சியின் சில்வி போன்வன்-சான்சோனென்ஸ் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

இப்போது மாநில அரசின் 7 இடங்களில் 5 வலதுசாரிகளிடம் உள்ளன. இடதுசாரிகளிடம் 2 இடங்கள் உள்ளன. அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடிக்க நினைத்தார்கள். மாநிலப் பாராளுமன்றத்தின் உறுதியான கணிப்புகள் இன்று பின்னேரம் தெரியவரும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Chris Lutke / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button