சூரிக் (Zürich) போன்ற சுவிஸ் நகரங்களில் பார்க்கிங் இடம் கிடைப்பது கடினமாகி வருகிறது. அதனால் பல கைத்தொழில் நிறுவனங்கள் நகரத்துக்குள் வேலை எடுக்கவே மறுக்கின்றன.
சூரிக்கில் 2021-ஐ விட இப்போது பார்க்கிங் இடங்கள் குறைவு. நீல மண்டலத்தில் (Blaue Zone) இடங்கள் குறைந்துள்ளன. வெள்ளை மண்டலத்தில் (Weisse Zone) கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் காணாமல் போய்விட்டன.
சுவிஸ் சிறு, நடுத்தரத் தொழில் சங்கம் (Schweizerischer Gewerbeverband) இது மற்ற நகரங்களிலும் நடப்பதாகச் சொல்கிறது. வேலைக்குப் போகும் தொழிலாளர்கள் இடம் தேடி நீண்ட நேரம் வண்டி ஓட்ட வேண்டியிருக்கிறது. அந்தச் செலவை யாராவது ஏற்க வேண்டும். சிலர் தாங்களே ஏற்கிறார்கள். சிலர் வாடிக்கையாளர் பில்லில் சேர்க்கிறார்கள். சிலர் வேலையையே வேண்டாம் என்கிறார்கள்.
ஒரு ஆன்லைன் தளம் (Ofri) நடத்திய கருத்துக்கணிப்பில், 2 நிறுவனங்களில் ஒன்று சூரிக்கில் சில வேலைகளை இப்போது எடுப்பதில்லை என்று சொல்லியிருக்கிறது.
சூரிக் நகர நிர்வாகம் இந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறது. நடப்பதற்கும் சைக்கிளுக்கும் அதிக இடம் கொடுக்கும் வகையில் சாலைகளை மாற்றுவதாகவும், ஆனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறுகிறது.
புதிய விதிப்படி, தொழிலாளர்கள் தேவைப்படும்போது வண்டியை சிறிது நேரம் நடைபாதையில் நிறுத்தலாம். மக்கள் வாக்கெடுப்பில் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சட்டச் சிக்கலால் இப்போதைக்கு இது நடைமுறைக்கு வரவில்லை.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





