சுவிஸ்

மிக்ரோ, கூப் பேக்கரியில் வெளிநாட்டு குரோசான்! சுவிஸ் விவசாயிகள் கவலை

சுவிஸ்ஸின் பெரிய கடைகளான மிக்ரோ (Migros), கூப் (Coop) இரண்டிலும் விற்கும் பேக்கரி பொருட்களில் கிட்டத்தட்ட 10-இல் ஒன்று வெளிநாட்டிலிருந்து வருகிறது. பேர்ன் (Bern) பத்திரிகை “Berner Zeitung” நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

ஜெர்மனி ப்ரெட், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா ப்ரெட்செல், அயர்லாந்து மஃபின், இத்தாலி இனிப்புப் பலகாரங்கள் எல்லாம் இதில் அடங்கும். ஆனால் தங்கள் பொருட்களில் பெரும்பாலானவை சுவிஸ்ஸிலேயே தயாராகின்றன என்று இரண்டு கடைகளும் சொல்கின்றன.

வெளிநாட்டிலிருந்து வாங்குவது ஏன்? காரணம் விலைதான். முழுதாகச் செய்த பேக்கரி பொருட்களுக்கு சுங்க வரி குறைவு. சில மூலப்பொருட்களுக்கு அது அதிகம். அதனால் சுவிஸ்ஸில் செய்வதை விட இறக்குமதி மலிவாகிறது. சுவிஸ்ஸில் ஒரு குரோசான் செய்ய சுமார் 1 பிராங்க் ஆகும். வெளிநாட்டில் 30 சென்டிம் மட்டுமே.

இதனால் சுவிஸ் விவசாயிகளுக்குப் பெரிய நெருக்கடி. ரொட்டிக்குப் பயன்படும் சுவிஸ் தானியம் பல ஆயிரம் டன் விற்க முடியாமல், மிருகங்களுக்கான உணவாகப் போகிறது.

இதைத் தடுக்க, இறக்குமதி பேக்கரி பொருட்களுக்கான சுங்க வரிச் சலுகைகளை நீக்கும் யோசனையைச் சுவிஸ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் 2025 பிப்ரவரி முதல், பொருள் எங்கிருந்து வந்தது என்பதைக் கடைகள் குறிப்பிட வேண்டும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Vishal Tiwari / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button