சுவிஸ்

சுவிஸ் வானொலி மீண்டும் FM-இல்: நவம்பர் 12 முதல் ஒலிக்கும்

சுவிஸ் அரசு ஒளிபரப்பு நிறுவனமான SSR-இன் வானொலிகள் மீண்டும் FM-இல் ஒலிக்கப்போகின்றன. வியாழக்கிழமை, நவம்பர் 12 முதல் நாடு முழுவதும் FM ஒலிபரப்பு படிப்படியாகத் தொடங்கும்.

சுவிஸ்ஸின் கிட்டத்தட்ட 10 பகுதிகளில் 8 பகுதிகளில் FM கேட்கலாம். நான்கு மொழிப் பிரதேசங்களின் முக்கிய வானொலிகள் ஒலிபரப்பாகும். இத்தாலிய மொழி RSI, ஜெர்மன் மொழி SRF, பிரெஞ்சு மொழி RTS ஆகியவற்றின் கலாசார வானொலிகளும் இதில் உண்டு.

பெரும்பாலான அலைவரிசைகள் (frequency) முன்பு இருந்தவையே. உங்கள் பகுதியில் எந்த அலைவரிசை, வேலை எவ்வளவு முடிந்தது என்பதை www.broadcast.ch இணையதளத்தில் பார்க்கலாம்.

FM ஒலிபரப்பு 2024 இறுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சுவிஸ் நாடாளுமன்றம் அதைத் தொடர அனுமதித்தது. மத்திய தகவல்தொடர்பு அலுவலகம் கொடுத்த புதிய உரிமமும் இப்போது உறுதியாகிவிட்டது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 6.5 மில்லியன் பிராங்க் செலவாகும். முன்பு முழு நாட்டையும் உள்ளடக்கிய போது செலவு இதைவிட இரண்டு மடங்குக்கும் மேல்.

DAB+ அல்லது இன்டர்நெட்டில் வானொலி கேட்பவர்களுக்கு எதுவும் மாறாது.


மூலம்: RSI
புகைப்படம்: Sung Jin Cho / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button