கிரான்-மொன்டானா (Crans-Montana) தீ விபத்தில் உயிர் தப்பிய குறைந்தது 7 பேருக்கு அவசர நிதி உதவி மறுக்கப்பட்டுள்ளது. வலே மாநில (Valais) அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 60,000 பிராங்க் அவசர உதவி வழங்கப்படுகிறது. இதில் ஒரு பகுதியை வலே மாநிலமும், பெரும் பகுதியை சுவிஸ் மத்திய அரசும் தருகின்றன. ஆனால் உடலில் கடுமையான காயம் பட்டவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்று மாநில உத்தரவு சொல்கிறது. இந்த 7 பேரின் காயங்கள் போதுமான அளவு கடுமையாக இல்லை என்று கருதப்பட்டது. மனதளவில் பெரிய பாதிப்பு இருந்தும் அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
அவர்களில் ஒருவர் வோ மாநிலத்தைச் (Vaud) சேர்ந்த இளைஞர். சில மணி நேரம் சியர் (Sierre) மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். மற்றவர்களுக்கு மிகக் கடுமையான காயம் இருந்ததால், தான் அங்கே இருப்பது சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. இப்போது இரவில் வெளியே போக முடியவில்லை. தீயைப் பார்த்தாலே பயம். அவரது வழக்கறிஞர், இது தீவிர மன அழுத்த பாதிப்பு போன்றது என்கிறார். நெருங்கிய நண்பர்களை இழந்த தனக்கு, பாதிக்கப்பட்டவர்களைப் பிரித்துப் பார்ப்பது புரியவில்லை என்கிறார் அந்த இளைஞர்.
காமிய் கத்தியோ (Camille Catillo) என்ற பெண்ணுக்கும் இதே நிலைதான். அவர் தன் உயிர்த் தோழியை இழந்தார். கையிலும் தீக்காயம் இருந்தது. ஆனாலும் உதவி மறுக்கப்பட்டது.
வலே மாநில சுகாதாரத் துறை சொல்வது இது: மொத்தம் 127 பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி கிடைத்துவிட்டது அல்லது கிடைக்கும். வழக்கறிஞர், மனநல மருத்துவர் செலவுகளுக்கு வேறு உதவிகளும் உள்ளன.
மூலம்: Le Matin
புகைப்படம்: Xavier von Erlach / Unsplash





