தமிழீழம்

வழக்கின் போது நீதிபதியின் முன்னால் கழுத்தை அறுத்துக்கொண்ட மூவர்! திருமலை நீதிமன்றில் பரபரப்பு

திருகோணமலை நீதிமன்றில் சந்தேகநபர்கள்  மூவர் நீதிபதிக்கு முன்னால் குற்றவாளி கூண்டில் வைத்து பிளேட்டினால் தமது கழுத்தறுத்துக் கொண்டதால் நீதிமன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (28) வழக்கு இடம்பெற்று வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கைதிகளில் மூவர் குற்றவாளிக் கூண்டில் வைத்து தங்களது கழுத்தை தாங்களே பிளேட்டினால் வெட்டியுள்ளனர். இதன்போது இரத்தம் சீறிப்பாய்ததாகவும் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் அங்கு இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை தலைமையக பொலிசாரினால் திங்கட்கிழமை (26) நிலாவெளி பகுதியில் வைத்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் இன்றையதினம் (28) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அதில் மூவர் தங்களுடைய கழுத்தை தாங்களே வெட்டியுள்ளனர். இதில் முகேஸ், அஜித்திரன், ரம்ஸான் ஆகிய மூவரே உயிர்மாய்க்க முயன்றுள்ளதாக தெரிய வருகிறது. இதில் முகேஸ் என்பவருடைய கழுத்தில் வெட்டு ஆழமாக இருந்ததால் அதிகளவான இரத்தம் வெளியேறியதாகவும் இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் நீதிமன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குறித்த மூவரும் திருகோணமலை வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தையல் போடப்பட்டு நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button