உலகம்

இஸ்ரேல் தேர்தல் ; முன்னனியில் பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுக்குப் பின்னர் வெளியான கருத்துக் கணிப்புகள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளியான  தகவல்களின் படி நெதன்யாகு  முன்னனியில் உள்ளதாக  சர்வதேச தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இரண்டு முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்ட வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளும் தலா 51 ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மற்றொரு முக்கிய தொலைக்காட்சி அலைவரிசை வெளியிட்ட கருத்துக் கணிப்பில், நெதன்யாகுவின் கட்சி 50 ஆசனங்களையும், எதிர்க்கட்சித் தரப்பு 52 ஆசனங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் 120 ஆசனங்களில் குறைந்தது 61 ஆசனங்களின் ஆதரவு அவசியமாகும்.

இந்தநிலையில், எந்தவொரு பிரதான கட்சியும் தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறாது என இந்தக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும், இவை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் மட்டுமே என்பதுடன், உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரே இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்படும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button