உலகம்

‘பெரும் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது‘ இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலியர்கள் பயணித்த ஃபிளை துபை விமானத்தை அதன் விமானி விபத்துக்குள்ளாக்க முயன்றதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு நேற்று (செப். 30) காலை புறப்பட்ட ஃபிளை துபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவழியில் சௌதி அரேபியாவின் தபூக் நகரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

ஏராளமான இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் இஸ்ரேல் அரசு போர் விமானங்களை ஏவியதாகக் கூறப்படும் நிலையில், நடுவானில் விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் தாக்கிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் சக விமானியைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றதாகவும், உடனடியாக வேறு இரண்டு விமானிகள் விமானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சௌதியில் பத்திரமாகத் தரையிறக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு விமானி சக விமானியைக் கத்தியால் குத்தியதாகவும், விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இன்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,  “விமானி ஒருவர் சக விமானியைக் கத்தியால் குத்தியதுடன், ஏராளமான இஸ்ரேலியர்கள் பயணித்த விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரியவருகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட ஃபிளைதுபை விமானத்தின் விமானியை சௌதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு பெரும் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button