உலகம்

‘கியூபாவிற்குப் பயணம் செய்வதைத் தவிருங்கள்’ கனடியர்களுக்கு எச்சரிக்கை!

கனடியப் பயணிகளின் முதன்மை விருப்பமான குளிர்காலச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கியூபாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா அரசு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் காரணமாக அங்கு கடும் உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும், கனடிய விமான நிறுவனங்களும் கியூபாவிற்கான தங்களது சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளன.

ஃப்ளைட் சென்டர்’ அமைப்பின் தரவுகளின்படி, வழக்கமாக கியூபா செல்லத் திட்டமிடும் பயணிகள் தற்போது பிற இடங்களை நோக்கித் திரும்பியுள்ளனர். 20% பயணிகள் பிற கரீபியன் தீவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

14% பேர் மெக்சிகோவிற்கும், 7% பேர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கும் செல்லத் திட்டமிட்டுள்ளனர், 7% பேர் சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணத்தை தேர்வு செய்துள்ளனர், 17% பேர் கனடாவிற்குள்ளேயே தங்களது விடுமுறையைக் கழிக்க முடிவு செய்துள்ளனர்.

கனடியர்கள் வழக்கமாகத் தங்கும் கியூபாவின் பல சுற்றுலா விடுதிகள் தற்போது செயல்படவில்லை என ஃப்ளைட் சென்டர் கனடாவின் துணைத் தலைவர் அனிதா எமிலியோ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button