இலங்கைதமிழீழம்

தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டி – யாழ். மாவட்ட செயலக அணி சம்பியன்

அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட தேசிய மட்ட இறுதிப்  போட்டியில் இலங்கை விமானப்படை அணியை வீழ்த்தி யாழ் மாவட்ட செயலக பெண்கள் அணி வெற்றி வாகை சூடியது.

 

அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இம்முறை யாழ் மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகத்தில் கடந்த 16 ஆம் திகதி  ஆரம்பமானது.

சுமார் 20 அணிகள் பங்கு பற்றிய குறித்த வலைப்பந்தாட்ட போட்டியில் கலப்பு பிரிவில் இலங்கை விமானப்படை மற்றும் யாழ் மாவட்ட செயலக அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி  நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில்  நீண்ட காலமாக சம்பியன் பட்டத்தை தனதாக்கிய விமானப் படை அணியை வீழ்த்தி யாழ் மாவட்ட செயலக அணி முதல் இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது .

குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான  பரிசளிப்பு வைபவம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில்   பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண தொழில் திணைக்கள ஆணையாளர் ராஜமல்லிகை ,மற்றும்  சாவகச்சேரி பிரதேச செயலாளர் ஏற்பட்ட பலர் கலந்து கொண்டனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button