இந்தியா

ரஷ்ய அதிபர் புடினுக்கு “திருக்குறளின்” ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசாக வழங்கிய மோடி!

18ஆவது BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, புதுடெல்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பண்டைய தமிழ் இலக்கியமான “திருக்குறளின்” ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசாக வழங்கினார்.

இந்த ரஷ்ய மொழிப் பதிப்பில், தமிழ் கவிஞரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரின் 1,330 குறள்களும்இடம்பெற்றுள்ளன. அறம், பொருள், ஆட்சி, ஒழுக்கம் மற்றும் காதல் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் இதில் இடம்பெறுகின்றன.

இந்தப் பதிப்பு இந்திய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டதுடன், நைரா மக்ர்சேயன்என்பவரால் ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் பரிசுகளை மோடி ஏற்கனவே புடினுக்கு வழங்கியுள்ளார். 2024ஆம் ஆண்டு கசானில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டின்போது, ஜார்கண்டின் சோஹ்ராய் ஓவியத்தைபுடினுக்கு பரிசாக வழங்கினார். அதேபோல், 2025ஆம் ஆண்டு பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்பு, அசாம் தேயிலை மற்றும் வெள்ளிக் குதிரை ஆகியவற்றையும் வழங்கியிருந்தார்.

புதுடெல்லியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை மோடி மற்றும் புடின் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்தப் பரிசுப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button