இந்தியாஉலகம்

CM விஜய் லண்டனை வந்ததில் மகிழ்ச்சி’ – நடிகர் அஜித்குமார்

லண்டன்: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ளார்.

சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தய நிகழ்வில் அஜித்குமார் பங்கேற்கும் நிலையில், அந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு பந்தயத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பேசிய நடிகர் அஜித்குமார், “முதலமைச்சர் விஜய் தனது பரபரப்பான பணிச்சூழலுக்கிடையே நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் அஜித்குமார் இருவரும் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் லண்டனில் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

#Vijay #AjithKumar #CMVijay #Ajith #TamilCinema #London

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button